Posts

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா: 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி கோலாகல ஊர்வலம்!

Image
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில், 46-ஆம் ஆண்டு ஆடி மாத 4-ஆம் வெள்ளிக்கிழமை திருவிழா மிக விமர்சையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இச்சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே தீவிர விரதமிருந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் வன்னிவேடு பாலாற்றங்கரையில் ஒன்றாகக் கூடினர். அங்கு விதவிதமான புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான பூக்கரகத்திற்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனைவரும் பக்தி முழக்கமிட்டுத் தங்களது கைகளில் காப்பு கட்டி நேர்த்திக்கடனைத் தொடங்கினர் பக்தர்களில் பலர் தங்களது உடம்பில் பல்வேறு அளவிலான அலகுகளைக் குத்திக்கொண்டும், சிலர் அந்தரத்தில் தொங்கியபடி  தங்களது மெய்சிலிர்க்க வைக்கும் பக்தி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, பால்குடங்களைத் தலையில் சுமந்தவாறு பக்தர்கள் பாலாற்றங்கரையிலிருந்து புறப்பட்டனர். மங்கள வாத்தியங்கள் மற்றும் பம்பை மேள தாளங்கள் முழங்க, பூக்கரகம் முன்னால் செல்ல, அலகு குத்த...